வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தற்கொலையாளிகள்: பிலிப்பைன்ஸில் விசாரணைகள்!
Sunday, August 11th, 2019
இலங்கையில் இருந்து இரண்டு பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதாக பிலிப்பைன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையவராக கூறப்படும் மார்க் கெவின் சம்ஹூன் என்பவரும் விக்டோரியா சோபியா என்பவருடன் பிலிப்பைன்ஸில் பயிற்சி
பெற்றதாக சிங்கப்பூரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதில் விக்டோரியா சோபியாவை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் 200 பேரை பலி கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும்சம்ஹூனின் தாயார் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேக நபர்கள் இருவரும் பிலிப்பைன்ஸின் சுயாபுல் கலீபா பிலுசான் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இந்த அமைப்பு பிலிப்பைன்ஸில் உள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|
|


