வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு கடன் வசதி – அமைச்சரவையும் இணக்கம்!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு 2 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளும் கடனுக்கு 4 சதவீத வட்டியில், கடன் வசதிகளை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடன் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரச மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்படாத வகையில் இந்த கடன் திட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
மிகவேகமாக பரவி வரும் ஆட்கொல்லி நோய் – மக்களுக்கு எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு: எதிர்ப்பு பிரசாரம் ஆரம்பம் - சுகாதார அமைச்சின் தொழுநோய் எ...
|
|