வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம் – வெளிநாட்டு உறவுகள் அமைச்சு!

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ என்ற இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது
இது தொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன இணைந்து உருவாக்கிய ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பு நேற்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk முகவரியிலும் மற்றும் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|