வெளிநாட்டுப் பயணத் தடையுடன் நாமலுக்கு பிணை!

Monday, July 18th, 2016

நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே விணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

50000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். றக்பி விளையாட்டுக்காக 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: