எரிபொருள் விலை அதிகரித்த போதும் முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றம் ஏற்படாது – அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, October 2nd, 2023

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாதந்தோறும் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தடையும் ஒவ்வொரு மாற்றத்திற்காகவும் மாற்றியமைக்க முடியாது என கூறினார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ஆகியவை நேற்று (01) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

அதற்கமைய பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவாலும் உயர்த்த சிபெட்கோ மற்றும் லங்கா IOC நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: