வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு தடுப்பூசி பெறுவது கட்டாயமானதல்ல – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!
Thursday, December 9th, 2021
இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பதுவன்துதாவ இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணம் செய்யும் நாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விமானத்தைப் பொறுத்து தடுப்பூசி விதிமுறைகள் மாறுபடும்.
ஒமிக்ரான் தொற்றுக்குள்ளான இலங்கைப் பெண்ணின் உறவினர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான பரிசோதனை அறிக்கை எதிர்வரும் இரண்டு நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நட...
தொடரும் கனமழை - கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!
|
|
|


