வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை இன்று புதன்கிழமைமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்குமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை - இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவிப்பு!
இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
|
|