வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
 Thursday, February 29th, 2024
        
                    Thursday, February 29th, 2024
            
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்றும் நாளையும் நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையிலும் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் அல்லது ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள், அனைத்து அதிபர்கள், மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக மனித உடலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        