வெட்டியி குழியில் எலும்பு எச்சங்கள் – அதிர்ச்சியில் அச்சுவேலி!
Friday, October 12th, 2018
அச்சுவேலியில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமான எலும்பு எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மதில் ஓரமாக மின்கம்பம் நடுவதற்கு வீதியில் அகழப்பட்டபோதே எலும்பு எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்பு எச்சங்களுடன் ஆடைகளும் காணப்படு கின்றன.
இது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். தடயவியல் பொலிஸார் மற்றும் நீதிவான் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது.
நீதவான் இன்று சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. எலும்பு எச்சம் தொடர்பில் விசாரணைகளின் பின்னரே உறுதியான தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
ஒக்ரோபர் முதல் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை!
இந்தியாவின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் நெடுஞ்சாலை!
யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு - கடந்த 3 வாரங்களில் 21 பேர் பாதிப்பு - வைத்தியர் யமுனானந்தா எச...
|
|
|


