வீதி விபத்துகள் – போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!

இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான கைப்பேசி செயலியொன்றை (Mobile App) பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையில், அவ்வமைச்சில் இன்று இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ‘ஈ – ட்ரெஃபிக் பொலிஸ் ஸ்ரீலங்கா’ (e-Traffic Police Sri Lanka) என்ற இந்த செயலியின் ஊடாக, பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இன்றி, போக்குவரத்து குற்றங்கள் மற்றும் வீதி விபத்துகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் - எச்சரிக்கும் நிபுணர்கள்!
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு: எதிர்ப்பு பிரசாரம் ஆரம்பம் - சுகாதார அமைச்சின் தொழுநோய் எ...
பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு - அ...
|
|