வீதிவிதிகள் தொடர்பில் இன்று முதல் அமுலாகும் கடுமையான சட்டம்!

வாகன நெரிசல்கள் மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இன்று(10) முதல் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விஷேடமாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பேருந்துகளுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு, கல்கிசை, வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பேருந்துகள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படும்.
Related posts:
வடக்கில் ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு!
சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!
இந்தியாவிலிருந்து 320 பயணிகளுடன் வந்திறங்கியது இலங்கை விமானம் – அனைவரும் இராணுவ தனிமைப்படுத்தல் நிலை...
|
|