இந்தியாவிலிருந்து 320 பயணிகளுடன் வந்திறங்கியது இலங்கை விமானம் – அனைவரும் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைப்பு!

Tuesday, May 12th, 2020

கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு. எல். 1122 என்ற விமானம் மூலம் இந்தியாவின் சென்னையிலிருந்து 320 இலங்கையர்களும் நண்பகல் 12.35 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து இன்று வருகை தந்த இலங்கையர்களுள் கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குகின்றனர்.

விமான நிலைய சுகாதார அதிகாரிகளால் 320 பயணிகளது உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு அவர்களிடம் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் உள்ளதாவென்றும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த இலங்கையர்கள் அனைவரும் அவர்களின் பொதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் இராணுவத்தின் பேருந்துகள் மூலம் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கை நாடாளுமன்றின் முக்கிய பதவிகளில் ஒன்றான படைக்கள சேவிதர் பதவியை வகித்து வரும் நரேந்திர பெர்னாண்டோ கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி அவர் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தனது மனைவியுடன் நியூசிலாந்து சென்று கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த மே மாதம் 10ஆம் திகதி அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது சொந்த செலவில் னிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: