வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை – சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர்!
Friday, March 22nd, 2019
உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
தற்போதைய கடும்வெப்பநிலை காரணமாக வீதியோரங்களில் செல்வோர் நலன்கருதி பலர் உள்ளூர் தயாரிப்பான சர்பத் மற்றும் ஜுஸ் வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் அவ்வாறு உள்ளூர் தயாரிப்புகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதை நிறுத்துமாறும் தவறின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.
Related posts:
இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை!
சீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ...
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!
|
|
|


