வீதித்தடைகள் அகற்றும் இராணுவத்தினர்!
Thursday, June 1st, 2017
நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரத்தினபுரி மாவட்டம் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு கற்பாறைகள் மற்றும் பாரிய மரங்கள் வீதியில் வீழ்ந்துடன் பல வீதிகள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத அளவிற்கு வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டது.
இதன் காரணமாக நிவாரண நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன், நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் குழுவினர் கைவிடப்பட்ட மற்றும் தூர பகுதிகளுக்கு செல்வதற்கு பல சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர்.
இதேவேளை, கலவான–அஹலவத்த- ரத்தினபுரி பாதை, அயகம–கவரகிரிய பாதை மற்றும் கலவான–அகலவத்த – இரத்தினபுரி பிரதான வீதி என்பன நவீன இயந்திரங்களை பயண்படுத்தி இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினரால் தடைகளை அகற்றி சுத்திகரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Related posts:
பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி வைத்தியர் கைது!
இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்று!
மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்வு!
|
|
|


