மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்வு!

Friday, January 5th, 2024


நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, ஒரு கிலோ கரட் 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி 2000 ரூபாவை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், போஞ்சி 500 ரூபாவாகவும், வெண்டைக்காய் 250 ரூபாவாகவும், மிளகாய் 700 ரூபாவாகவும், கோவா 500 ரூபாவாகவும்,போஞ்சி மற்றும் தக்காளி 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் தமக்கு உரிய பலன் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்

Related posts: