சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்து!

Monday, February 12th, 2024

சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்திய இராஜதந்திர நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 120 வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் வலுவான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளதுடன் இலங்கைக்கும் அதன் உலகளாவிய பங்காளிகளுக்கும் நன்மையளிக்கக்கூடிய ஒத்துழைப்புக்கான புதிய வெளியை உருவாக்குதல் தொடர்பிலும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இலங்கை புத்துயிர் பெற்று சவால்களுக்கு மத்தியிலும் சுபீட்சத்திற்கும் வெற்றிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பாதையில் பயணித்து வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் திரு உதய இந்திரரத்ன வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: