வீதிக் குறியீடுகள் சீரமைப்பு!
Saturday, March 3rd, 2018
யாழ். குடாநாட்டில் பிரதான வீதிகளில் உள்ள வீதிக்குறியீடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் பருத்தித்துறை வீதி, கைதடி, நாவற்குழி போன்ற பிரதான வீதிகளில் உள்ள வீதிக் குறியீடுகள் அழிந்த நிலையில் காணப்பட்டன.
தற்போது இவ் வீதி குறியீடுகள் மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றன. அவற்றுள் பிரதான வீதிகளில் சந்தியை அண்டிய பகுதிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கோடுகளும் புதிதாக அமைக்கப்பட்டும் வருவதாக வீதி அதிகார சபை தெரிவித்தது.
குடாநாட்டில் பிரதான வீதிகளில் வரையப்பட்ட இந்த வீதி குறியீடுகள் அழிந்த நிலையில் உள்ளன. இந்த வீதி குறியீடுகளை மீளவும் மறுசீரமைப்பதற்கு கொழும்பில் இருந்து இதற்கான மூலப்பொருள்களும் இயந்திரமும் எடுத்து வரப்பட்டன. இவ் வீதிக்குறியீடுகள் தொடர்ந்து மறுசீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Related posts:
நாட்டில் 10 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்!
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் - தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களி...
|
|
|


