வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதே வீதி விபத்துகள் அதிகரிக்க காரணம் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, August 4th, 2023

நாட்டிலுள்ள வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதாலேயே அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல ஆண்டுகளாக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாமையினால், வீதிகள் குன்றும் குழியுமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து இதற்கு துரித தீர்வை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: