வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது – இந்து மத சிவாச்சாரியார் சச்சிதானந்த சிவக் குருக்கள் தெரிவிப்பு!
Monday, July 27th, 2020
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத மேடை பல்வேறு அனுபவங்களை வழங்கியது. அதனடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சரியான தலைமை எதுவென்பது தொடர்பாக ஆராய்ந்த போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே சரியான தெரிவு என்பதை உணர்ந்து கொண்டேன். அதனடிப்படையில், அவருடன் கைகோர்த்து வீணையில் களம் இறங்கியுள்ளேன் என இந்து மத சிவாச்சாரியார் சச்சிதானந்த சிவக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்
மேலும் வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எனவே வீணையைப் பலப்படுத்துங்கள் நிச்சயம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும்” என்று இந்து மத சிவாச்சாரியார் சச்சிதானந்த சிவக் குருக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


