வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, August 29th, 2020

கடந்த காலங்களில் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இணக்க அரசியலூடாக பயணித்ததன் பயனாக வடமாகாணம் கல்வியில் உயர் நிலையில் இருந்தது. அத்தகையதொரு சிறந்த நிலையை மீண்டும் வடமாகாணத்தில் கொண்டவர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளும்னற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்கி பாடசாலை கட்டிடங்கள் புனரமைக்கப்படுவதுடன் புதிய பாடசாலை கட்டிடங்கள் கட்டப்பட்ட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இடைகாகால பாதீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு தனது கன்னி உரையை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

இன்று நான் இந்த ஆசனத்தில் அமர்வதற்கு காரணமான எமது கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சக தோழர்களுக்கும் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்களுக்கு என்ன தேவையோ அவற்றை தாம் மட்டும் பெற்றுக்கொள்ளும் தமிழ் போலி அரசியல்வாதிகள், உரிமை பெற்றுத்தருவோம் என்று சூடேற்றும் வார்த்தைகளையே கடந்த காலங்களில் வழங்கி. தமிழ் மக்களை மீண்டும் நடுத்தொருவில் விடும் கைங்கரியத்தையே செய்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆட்சிகாலத்தில் வீட்டுத் திட்டம் என்ற பெயரில் மக்களை கடனாளிகள் ஆக்கியது போலல்லாது வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சேதமடைந்த வீடுகள் கிணறுகள் மலசல கூடங்கள் புனரமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் வடக்கின் வசந்தத்தில் வழங்கிய தரமான வீதிகள் போல் தரமான வீதிகள் மீண்டும் போடப்பட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிரந்தார்.

மேலும் மன்னார் இரணை இலுப்பைக்குளம் வைத்தியசாலைக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக நிரந்தர வைத்தியர் இல்லாமையால் வாரங்களுக்கு ஒரு தடவையே வைத்திய சேவை வழங்கப்படுகிறது இவ்வாறு பல வைத்தியசாலைகள் வன்னியில் உள்ளது.

இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். வன இலாகாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் வடுவிக்கப்பட வேண்டும். என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: