ஈழமக்கள் ஜனநாயக கட்சி செய்த பெரும்பணிகளுக்கு யாழ்.குடாநாடே சாட்சி சொல்லும் – கட்சியின் நல்லூர் நிர்வாக செயலாளர் இரவிந்திரதாசன்!

Sunday, December 4th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகிய நாம் மக்களுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடுகளும் தூரநோக்கடைய யதார்த்தபூர்வமான செயற்பாடுகளாகவே அமைந்துள்ளது. இத்தகைய எமது மக்களுக்கான பணிகளில் பலவிதமான தடைகளையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு நாம் தமிழ் மக்களுக்கு பல்வேறுபட்ட தேவைகளை பெற்றுக்கொடுத்து வெற்றிகண்டிருக்கின்றோம். இதன் சாட்சியமாக யாழ் குடாநாட்டு மக்களுக்காக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  மேற்கொண்ட சுயநலமற்ற பெரும்பணிகள் பறைசாற்றுகின்றன -என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் குளப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள கலைவாணி கலா மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் தலைவர் சிறிக்குமரன் தலைமையில் இன்றையதினம்(04) நடைபெற்ற கூட்டத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்  –

வெளிப்படையான பேச்சுக்களும் அதனூடான உண்மையான செயற்பாடுகளும்தான் எமக்கு மக்கள் பணிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளது. இதை பொறுக்க முடியாத இதர கட்சிகள் எம்மீது அபகீர்த்திகளை மேற்கொண்டு மக்களுக்கான எமது பணிகளை முடக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாம் என்றும் மக்களுக்கான பணிகளிலிருந்து ஒதுங்கிவிடப் போவதில்லை.

3 - Copy

மூன்று தசாப்தத்திற்கு முன்னர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த யதார்த்த அரசியல் நிலைப்பாட்டை  காலம் கடந்த நிலையில் பின்பற்ற தொடங்கியுள்ள கூட்டமைப்பினர் அந்த இணக்க அரசியலுக்கும் அபகீர்த்தியை எற்படுத்தும் வகையில் தமது சுயநல அரசியலையும் சுகபோக வாழ்வையும் நடத்தி வருகின்றனர். இத்தகைய மக்கள் நலனற்ற சுயநல போக்குகள் தொடருமானால் தொடர்ந்தும் எமது மக்கள் ஏதிலிகளாகவே வாழவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே மக்களாகிய நீங்கள்  இன்று ஒரு தெளிவான நிலைப்பாட்டை கையிலெடுத்து மக்கள் மீது அக்கறையும் அவர்களது செயற்பாடுகள் மீது  ஆற்றலும் உள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டும். அதனூடாகவே தமிழ் மக்களது வாழ்வியலையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்கமுடியும் என தெரிவித்தார்.

2

இதன்போது கலைவாணி கலா மன்றத்தினரால் பல்வேறுபட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் தமது பகுதி மக்களது வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன்  தமது மற்றத்திற்கு வாத்தியக்கருவிகள் கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை மனு ஒன்றையும் இரவிந்திரதாசனிடம் கையளித்திருந்தனர்.

இதன்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக சபை உறுப்பினர் பிரதீபன் உடனிருந்தார்.

Related posts:

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவ...
ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ...