விஷேட வைத்திய நிபுணர்களது ஓய்வு பெரும் வயதெல்லை நீடிப்பு!

அனுபவம் வாய்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெரும் வயதெல்லையை 63ஆக நீடித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் 1164 விஷேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய முறைகளின் படி, இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதன்படி அனுபவம் வாய்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் அனுமதி மறுப்பு!
சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கே...
|
|