விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் – வடக்கின் வர்த்தக நிலையங்கள் – சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச் விசேட சோதனை!
Tuesday, March 30th, 2021
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்க கூடிய இரசாயன பதார்த்தம் உள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களின் சேமிப்பு கிடங்குகளில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
மத்திய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தரவை தொடர்ந்து வடக்கில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மாதிரிகள் பெறப்படுவதுடன் உடனடியாக அவை பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கை மாவட்ட மட்டத்தில் உள்ள பாவனையாளர் அதிகார சபைகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம்
வெற்றி பெற்றார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ!
பொதுப் போக்குவரத்தின் போது சுகாதார விதிமறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊட...
|
|
|


