விவசாய அபிவிருத்திக்கு 160 வேலைத் திட்டங்கள்!
 Thursday, December 21st, 2017
        
                    Thursday, December 21st, 2017
            கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்கு திணைக்களத்தினூடாக 160 வேலைத்திட்டங்கள் 266, 028 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இவ்வாண்டு மேற்படி 160 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதாவது மீள்குடியேற்ற அமைச்சினுடைய 100 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் 36 வேலைகளும் விவசாய அமைச்சினுடைய 100 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் 47 வேலைகளும் 48 விவசாய கிணறுகளை அமைப்பதற்கு 10 மில்லியன் ரூபா உள்ளடங்கலாக ஏனைய நிதியீட்டங்கள் ஊடாக 160 வேலைத்திட்டங்கள் 266.028 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        