விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கி தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, August 11th, 2023

நாட்டின் விவசாயிகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும், நாட்டின் நலனுக்காக எடுக்க வேண்டிய எந்த முடிவையும் எடுக்க அரசாங்கம் தயங்காது எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்..

சமனல குளம் நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய தேவைகளுக்காக நீர் திறப்பு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்ச கொள்ளளவிற்கு நீர் திறந்து விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமனல குளம் நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய தேவைகளுக்காக நீர் திறந்துவிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் சமனல குளம் நீர்த்தேக்கத்தின் மின்சார உற்பத்தி நிறுத்தப்படலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் தொடர்ந்து மின்சார விநியோகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: