டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு!
Monday, December 23rd, 2019
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சில் விசேட ஆராய்ச்சி பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது. பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாண வளாகங்களில் டெங்கு நுளம்புகள் கூடுதலாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது..
இதனை கருத்திற் கொண்டு இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிருபங்களை வீடமைப்பு, நிர்மாணத்துறைஅமைச்சின் ஊடாக அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
Related posts:
சாரதித்துவ தவறுகளுக்கு 10 வருட சிறையுடன் 50000 ரூபா தண்டம் அறவிட தீர்மானம்!
சர்வதேச சந்தையில் இறப்பருக்கு கூடுதல் வரவேற்பு!
சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டவியல் திணைக்களம் !
|
|
|


