விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

ஒரு கிலோகிராம் நாட்டு நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 55 ரூபாவுக்கு நாளைமுதல் கொள்வனவு செய்யுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு கிலோகிராம் நாடு நெல் 50 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டு ரோந்து - இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா!
யாழ். மாவட்டத்தில் வாழைப்பழங்களின் விலையில் கடும் உயர்வு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை எதிர்வரும் மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் வி...
|
|