விவசாயம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு : கடற்றொழில் பாதித்தால் ஏதுமில்லை – வடமராட்சி மீனவர்கள் வேதனை!

Tuesday, December 25th, 2018

கடந்த பல வாரங்களாக ஏற்பட்ட மோசமான கடற்கொந்தளிப்பு  மற்றும் மோசமான காலநிலை மாற்றத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக தாம் கடற்றொழிலில் ஈடுபடவில்லை என்று வடமராட்சி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் பாதிக்கப்படும்போது இழப்பீடுகள் வழங்கும் திட்டம் கடற்றொழில் பாதிக்கப்படும்போது இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த பல வாரங்களாக மோசமான காலநிலையும் சமாளிக்க முடியாத அளவுக்கு கடற்கொந்தளிப்பும் நிலவுகின்றது. இதனால் கடற்றொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. பகுதி நேரத் தொழில்கள் செய்தே வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

விவசாயிகள் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக பாதிக்கப்பட்டபோது பல ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஆனால் கடற்றொழில் பாதிக்கப்படுகின்றபோது அரசோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ கவனமெடுப்பதில்லை என்றனர்.

Related posts: