விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டம், விவசாயம், நீர்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து, அரசாங்க மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக குறித்த செயலணி ஸ்தாபிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
9 மாகாண சபைகளின் வளங்களைக் கொண்டு விவசாயத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை வினைத்திறனுடன் தீர்க்கும் நோக்கில் குறித்த செயலணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெரும்போகத்துக்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புகளினால் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 8 ஆயிரத்து 360 மெற்றிக் டன் யூரியா உரத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் குறித்த நிகழ்வு நேற்று ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பங்குபற்றலுடன் ஆரம்பமானது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் குருநாகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு ஹெக்டயாரில் நெற்பயிர்ச்செய்கை செய்யும் சிறு விவசாயிகளுக்காக இந்த உதவி வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|