விவசாயக் குடும்பப் பிள்ளைகள் புலமைப்பரிசில் பெறமுடியும் – கமநல திணைக்களம் !

Friday, May 4th, 2018

யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியம் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் இ.நிஸாந்தன் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்தப் புலமைப் பரிசிலைப் பெறுவதற்கான தகைமை, முழுநேர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பெற்றோரில் ஒருவராவது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஏதாவதொரு கமக்கார அமைப்பில் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

அதுமட்டுமன்றி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி.சி.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்று 2019 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவராக இருத்தல் வேண்டும். குறித்த தகைமையுடைய விண்ணப்பதாரிகள் தமது எல்லைக்குட்பட்ட கமநல சேவை நிலையத்தில் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று தத்தமது கமக்கார அமைப்பின் சிபார்சுடன் உரிய கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் தமது சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தைத் தாம் கல்வி கற்கும் பாடசாலை அதிபர், குறித்த கிராம அலுவலர் ஆகியோரின் சிபார்சுக் கடிதங்களுடன் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கையளிக்க வேண்டும்.

Related posts: