இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021

இலங்கையில் டியிற்றல் நோமர்ட் விசா (Digital Nomad Visa) என்ற புதிய விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த விசா நடைமுறை இலகுவானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய வெளிநாடுகளில் பணியாற்றும் நபர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து வெளிநாடுகளில் உள்ள தொழில்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொள்வதற்கு இந்த விசா ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த விசா ஊடாக அந்த நபர் இலங்கையில் இருந்து தொழில் செய்தால் அவரது சம்பளம் இந்த நாட்டில் செலவு செய்யப்படும்.

அதற்கமைய அந்த பணம் நாட்டினுள் புழக்கத்தில் விடப்படும். அதன் மூலம் நாட்டினுள் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: