விவசாயக் காப்புறுதி இலவசம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

விவசாய காப்புறுதியை இலவசமாக வழங்கும் பணிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நெல், வெங்காயம், மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு ஆகிய பயிர் உற்பத்தியாளர்களுக்கு நன்மை கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான விவசாயக் காப்புறுதிக்காக அரசாங்கம் 5 ஆயிரத்து 228 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
பயிர்ச் சேதங்களின் போது விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் விவசாய காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ், உறுப்பினர் தொகையாக வருடாந்தம் ஆயிரத்து 350 ரூபாவைவிவசாயிகள் இதுவரை காலம் செலுத்தியுள்ளனர்.
எனினும் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய, இந்த கொடுப்பனவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
குடாநாட்டில் 40,000 வீடுகளுக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் - மின்சக்தி அமைச்சர் !
சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ், சிங்கள எழுத்துரு புத்தகங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஜனாதிபத...
தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்கள...
|
|