விளையாட்டு வினையானது: கப்பலில் இருந்த பொருட்களை எடுத்த குற்றச்சாட்டில் ஐவர் விசேட குற்ற பிரிவினரால் கைது!

மயிலிட்டி கடற்கனரயோரமாக அநாதரவாக நீண்ட நாட்களாக காணப்படும் கப்பலில் இருந்த பொருட்களை எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ஐவர் நேற்று மாலை காங்கேசன்துறை விசேட குற்ற பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவது –
கடற்கரை பார்க்க வந்த இளைஞர்கள் கரையில் இருந்த கப்பலை பார்க்க சென்றுள்ளனர்..இதுவரை கப்பல்கள் பார்த்திராத காரணத்தால். அனுபவம் இல்லாமல் சாதாரண விளையாட்டு வெடி என நினைத்து அமத்தி உள்ளனர்.
அது மேலே சென்று பிரகாசமாக வெடுத்துள்ளது. இதனை பார்தவுடன் அங்கு இருந்த இளைஞர்கள் அதேபோல் உள்ளவற்றை தாம் கொண்டு வந்த முச்சக்கர வண்டியில் கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல்வளங்கியதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி - அமைச்சர் பந்துல குணவர்தன!
இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 ஆவது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்ப...
இலங்கையின் முதலீடுசெய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் - ஜப்பான் பிரதித் தூதுவர் இலங்கை முதலீட்டுச்...
|
|