விலை குறைக்கப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனைக்கான கட்டணம் தொடர்பில் விசாரணை!

Wednesday, June 21st, 2017

தனியார் பிரிவுகளில் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன்படி மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உணவு மற்றும் மருத்து பரிசோதகர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ள நிலையில் , அதனுடன் தொடர்புடைய அறிக்கை சுகாதார அமைச்சருக்கு கையளிக்கப்படவுள்ளது. அதேபோல் , விலை குறைப்பை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.டெங்கு நோயின் அதிகரிப்பு காரணமாக இரத்த மாதிரி பரிசோதனைக்காக அறிவிடப்படும் கட்டணம் 250 ரூபா வரையில் குறைக்கப்பட்ட நிலையில் , டெங்கு இரத்த மாதிரி பரிசோதனைக்காக அறவிடப்படும் அதிகபட்ச கட்டணம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கடந்த தினத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: