விலையை குறைக்காவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி – இன்று முக்கிய கலந்துரையாடல் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Thursday, September 21st, 2023
கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது 1250 ரூபாயாக விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலையை 200 ரூபாயினால் குறைப்பதற்கு கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இல்லாவிடின் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பாக இன்று தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
30 ஆயிரம் கண்ணிவெடிகள் முகமாலையில் இதுவரை மீட்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது - வடமாகாண ஜனந...
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
|
|
|


