வினைத்திறனற்றவர்களை நம்பியதால் இன்றும் ஏதிலிகளாக வாழ்கின்றோம் – வலைஞர் மடம் பகுதி மக்கள் ஆதங்கம்!

Monday, February 5th, 2018

வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் நாம் இன்றும் அவல வாழ்வுக்குள் இருக்கவேண்டிய துர்ப்பாக்கியத்திற்குள் இருப்பதாக முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு வலைஞர் மடத்தில் நேற்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்

யுத்தத்தின் போது அதிகளவான இழப்புக்களை நாம் சந்தித்திருந்தோம். இது மாத்திரமின்றி இற்றை வரையில் எமது வாழ்வு வழமைக்குத் திரும்பவில்லை. ஒரு இயல்பான வாழ்க்கைக்கான ஏக்கத்துடனேயே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி வடக்கு மாகாணசபையில் அவர்களை வெற்றி பெறச் செய்தோம்.

ஆனால் இன்று எங்களது கனவுகளும் ஆசைகளும் கானல் நீராகி விட்டன. எதையும் எமக்காகச் செய்யாத அவர்களுக்கு வாக்களித்ததுதான் நாம் செய்த தவறு. எமக்கான தேவைகள் பிரச்சினைகளுக்கு வடக்கு மாகாண சபையினூடாக உரிய தீர்வுகளைப் பெற்றுத்தரக் கூடியதாக இருந்தும் ஏன் அவர்கள் எமது விடயங்களிலும் தேவைகளிலும் அக்கறை காட்டாமல் இருக்கின்றார்கள் என்றும் மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அந்த வகையில் மக்களுக்காக நாள்தோறும் சேவை செய்யும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதே எமது இன்றைய தேவை என்றும் மக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

Related posts: