விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் தகவல்களைப் பெற நடவடிக்கை!

காட்டு விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பான தகவல்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
காட்டு விலங்குகளினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை விவசாயிகள் எழுத்துமூலம் அறிவிக்க முடியும். 011 287 2094 என்ற அலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு சேத விபரங்களை அறிவிக்குமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையில் வருடமொன்றுக்கு 30 தொடக்கம் 35 வீதமான உற்பத்திகள், காட்டு விலங்குகளால் அழிவடைவதாகவும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் - மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!
|
|