விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, October 29th, 2016

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருவதாக அணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இக்கொலை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முதற்கட்ட விசாரணைகளை அடுத்து மேலதிக நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்கும் எனவும் அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதி காங்கேசன்துறை வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். துப்பாக்கி குண்டு பட்டு ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மற்றைய மாணவன் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்வரனின் உத்தரவி;ற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் மாதம் 4ஆம் திகதியிலிருந்து சந்தேக நபர்களான 5 பொலிஸாரும் மீண்டும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பவுள்ளனர்.

இதன்போது கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையிலேயே மாணவர் மரணம் அதன் பின்பாக நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது என கனகராஜ் கூறினார். துப்பாக்கிச் சூடு பட்டே மாணவன் ஒருவர் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அதுவரை இதனை விபத்தெனவே பொலிஸார் கூறியதாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் மரணம் தொடர்பில் நீதிமன்ற ஆணைக்கினங்க குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய விசாரணை சுதந்திரமாக நடக்க வேண்டும். இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையின் பின்னர், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழு நிச்சயமாக முன்னெடுக்கும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: