விற்பனை செய்யப்படுகின்றதா தேசிய ஊடகங்கள்?
Tuesday, May 16th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின்படி, மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களில் சில விற்கப்படும், மற்றவை மூடப்படும், இணைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை சுமார் இரண்டு மாதங்களில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று திறைச்சேரியின் மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
430 நிறுவனங்களில் 39 பெருநிறுவனங்கள், 218 நிறுவனங்கள், 173 சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் 21 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அடங்கும்.
விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் தேசிய ஊடகங்கள் அடங்கும். இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான ரூபவாஹினி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


