விரைவில் வற் வரி நடைமுறைக்கு வரும்!

சர்ச்சைக்குரிய வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் கேட்டறிந்ததன் பின்னரே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி இது பற்றி தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட முன்னதாக வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக்கொள்கை தொடர்பில் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வரலாற்றில் ஏற்படாத நிலை தற்போது இலங்கையில்!
பலாலி விமான நிலையத்தை ஆராய இந்திய குழு பயணம்!
முன்னாள் பிரதமர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வு துறையினர் வாக்குமூலம்!
|
|