விரைவில் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம் !
Thursday, March 16th, 2017
பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திர முனை வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை ஆரம்பிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இன்று மாலை 07.00 மணியளவில் தாதியர் சங்க நிறைவேற்று சபையில் இந்த தீர்மானம் எட்டப்படவுள்ளது.
காலை அபயாராமயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அச் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் நாட்டின் சில தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமன் ரத்னப்பிரிய மற்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் தமது போராட்டம் குறித்து வெளியிட்ட கருத்துக்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய இது குறித்து அரசாங்கம் உரிய பதில் அளிக்காவிடில், போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


