விரைவில் தொகுதிவாரி முறையில் தேர்தல் -ஜனாதிபதி!

Saturday, April 8th, 2017

வெகு விரைவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான புதிய சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சில ஆண்டுகள் கடந்துள்ளன.எனினும் கடந்த அரசாங்கம் நிறுவிய எல்லை நிர்ணய சபையின் நடவடிக்கைகளினால் தேர்தலை ஒத்தி வைக்க நேரிட்டுள்ளது.

அத்துடன் தொகுதிவாரி அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதிய முறையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்படும்.விருப்பு வாக்கு முறையினால் அரசியல் கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது.இதனால் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களின் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலைமைகளை சரி செய்வதற்கு புதிய தேர்தல் முறைமை வழியமைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: