விமான நிலைய பிரமுகர் பிரிவில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் – இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல்..!

Sunday, May 28th, 2023

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர்களுக்கான பிரிவை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிலரினால் சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதுதொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமான நிலையத்தின் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: