விமான நிலைய நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
Wednesday, November 16th, 2016
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிலைய விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சமன் எதிரிவீர தெரிவித்துள்ளார்.
விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு இரவு நேர விமான சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக விமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தற்போது 60 லட்சம் பயணிகளுக்கான வசதிகளை கொண்டிருப்பதுடன், அதனை சுமார் 80 லட்சம் பேர் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
பயணிகள் நெரிசலை தவிர்க்குமுகமாக நவீனமயமாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தில் 103 திருத்தங்கள்!
அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றி...
|
|
|


