புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தில் 103 திருத்தங்கள்!

Friday, September 8th, 2017

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் 103 திருத்தங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய உள்நாட்டு இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. வரிமுறையினை இலகுப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதே புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் நோக்கமாகும்.

அந்த சட்டமூலத்தின் 2ஆம் கட்ட வாசிப்பு தற்சமயம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது. அதனைத் தொடர்ந்து 3ஆம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் என்பன இடம்பெற்று இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய தொழிற்சங்கம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்ட நிலையில், பல திருத்தங்கள் குழுநிலை விவாதத்தின் போது முன்வைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது இந்த நிலையிலேயே எதிர்கட்சிகள் புதிய இறைவரிச் சட்டமூலத்திற்கு 103 திருத்தங்களை முன்வைத்துள்ளன.அது தொடர்பான வாதங்கள் தற்சமயம் நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றன

Related posts: