விமான சேவை இரத்து!

சைனா ஈஸ்டன் (China Eastern) விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 04 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி முதல் இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
அதேபோல், சைனா சதர்ன் மற்றும் எயார் சைனா விமான சேவைகள் கொழும்பிற்காக தமது விமானப் பயணங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானத்தை செலுத்தி வருவதாக குறித்த விமான சேவை நிறுவனங்களின் உள்ளூர் முகவர் நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எனினும், கொழும்பு மற்றும் பீஜிங் இடையிலான விமான சேவை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான யோசனை விரைவில் நாடாளுமன்றத்தில் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க...
|
|