விமல்வீரவங்ச மற்றும் பிரசன்னவுக்கு நாடாளுமன்றம் தடை விதிப்பு!
Friday, September 21st, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீரவுக்கு 04 வாரங்களும் விமல் வீரவங்சவுக்கு 02 வார காலமும் பாராளுமன்றம் தடை விதித்துள்ளது.
பாராளுமன்ற நெறிமுறைகளை மீறியமை தொடர்பில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் பிரசன்ன ரணவீரவுக்கு பாராளுமன்றம் தடை விதிப்பது குறித்த யோசனைக்கு ஆதரவாக 41 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, விமல் வீரவங்சவுக்கு எதிராக யோசனைக்கு ஆதரவாக 39 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|
|


