மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021

பெருந்தோட்டப் பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது மலையகமெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாம் அனைவரும் சுகாதார வழி முறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

தேயிலை தோட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அதற்காக இரண்டு கைகளை மாத்திரம் கொண்டுள்ள தொழிலாளி ஒருவருக்கு முடியுமான அளவே பறிக்க முடியும்.

அதனடிப்படையில் 30 ஆம் திகதி மேலதிக கொழுந்து பறித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன். கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் பணிக்கு செல்ல முடியாது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான நிவாரணம் வழங்கும் முறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது

Related posts: