நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும் திரையரங்குகள் மீள் திறப்பதற்கு அனுமதி இல்லை – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

சினிமா திரையரங்குகள் முழுமையாக குளிரூட்டப்பட்டவை என்பதால் அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும்.

அந்தவகையில் பொது இடங்கள் திறக்கப்படலாம், எனினும், சினிமா திரையரங்குகள் குறித்து சுகாதார அதிகாரிகள் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை, என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செயல்படக்கூடிய பொது இடங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாடு முழுவதும் இன்றுமுதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு...
அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!