விபத்துக் காப்புறுதி அவசியம் : கடற்தொழிலாளர்களுக்கு நீரியல் வளத் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Saturday, May 18th, 2019

கடற்தொழிலாளர்கள் விபத்துக் காப்புறுதி செய்வது பயனுள்ளதாக அமையும் என்று யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுபவர்வர்கள் எந்த நேரத்திலும் விபத்தில் சிக்கலாம். அவர்களின் தொழில் சவாலானது. ஆகவே அவர்கள் இவ்வாறு ஒரு காப்புறுதியை முற்கூட்டியே செய்வதால் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு இலகுவானதாக அமையும்.

சாதாரணமாகத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களாக இருந்தால் அவர்களின் குடும்பத்துக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையாக அரசால் 10 இலட்சம் ரூபா கிடைக்கும்.  காப்புறுதி செய்வதன் மூலம் மேலும் ஒரு தொகை கிடைக்கும். யாழ்ப்பாணத்தில் இதுவரை மூன்று கடற்தொழிலாளர்களின் இழப்புக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று பேருக்கு இந்தத் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுமார் 21 ஆயிரம் கடற்தொழிலாளர்களில் இதுவரை 4 ஆயிரத்து 839 கடற்தொழிலாளர்கள் விபத்துக் காப்புறுதிக்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்தக்காப்புறுதிச் சேவைக்காக வருடாந்தம் 995 ரூபா செலுத்தினால் போதுமானது. ஆகவே விபத்துக் காப்புறுதியை பதிவு செய்வதற்கு திணைக்களத்தில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: